ஆயிரம் லிட்டர் தண்ணீர் 11 ரூபாய் 70 பைசா விற்கும் திட்டம்
ஆயிரம் லிட்டர் தண்ணீர் 11 ரூபாய் 70 பைசா விற்கும் திட்டம்
கோவை
கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு ஆயிரம் லிட்டர் ரூ.11.70 -க்கு விற்பனை செய்யும் திட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
கழிவுநீர் சுத்திகரிப்பு
கோவை மாநகராட்சி உக்கடம், பெரியகுளம் பகுதியில் 70 எம்.எல்.டி. (7 கோடி லிட்டர்) கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு தினசரி சராசரியாக 30 முதல் 35 எம்.எல்.டி. கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு நொய்யல் ஆற்றில் விடப்பட்டதால் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது உக்கடம் கழிவுநீர் பண்ணை வளாகத்தில் சுத்திகரிக்கப் பட்ட தண்ணீரை தேக்க 20 லட்சம் லிட்டர் தரைமட்ட தொட்டி கட்டப்பட்டு உள்ளது.
அங்கிருந்து புல்லுக்காடு வழியாக வெள்ளலூர் குட்டையில் சுமார் 50 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சேகரிக்கப்படுகிறது.
1000 லிட்டர் ரூ.11.70
அந்த குட்டையில் இருந்து தினமும் 3 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர் இன்று (புதன்கிழமை) முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.
1000 லிட்டர் தண்ணீர் 11 ரூபாய் 70 பைசா என்ற விலையில் எடுத்துக்கொள்ள மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், குடிநீர் அல்லாத மாற்று உபயோகத்திற்கு தொழிற்சாலைகளுக்கோ, கல்லூரிகளில் மரம், செடி வளர்க்கவோ
அல்லது இதர பாசனத்திற்கோ உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இருந்து எடுத்துச்செல்ல வழிவகை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story