காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்த மினிலாரி கவிழ்ந்தது


காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்த மினிலாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 21 Dec 2021 8:41 PM IST (Updated: 21 Dec 2021 8:41 PM IST)
t-max-icont-min-icon

காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்த மினிலாரி கவிழ்ந்தது

கூடலூர்

கூடலூரில் இருந்து ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் கூடலூர் முதல் நடுவட்டம் வரை மிகவும் செங்குத்தான மலைப்பாதையாக உள்ளது. இதனால் ஊட்டியில் இருந்து கூடலூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் மலைப்பாதையில் கவனமாக செல்ல வேண்டும் என போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு எச்சரிக்கை பலகைகள் பல இடங்களில் வைத்துள்ளனர். 

இருப்பினும் சில வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில் ஊட்டியில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கூடலூர் நோக்கி மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. 

அப்போது மேல் கூடலூர் கிறிஸ்தவ ஆலயம் முன்பு வந்தபோது திடீரென மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வீடுகள் இருந்த பகுதியில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் அதிஷ்டவசமாக டிரைவர் சரவணன், கிளீனர் முத்து ஆகியோர் காயம் இல்லாமல் உயிர் தப்பினர். அத்துடன் அங்குள் ளவீடுகளும் சேதமாகவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story