மாளந்தூர் காலனியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதால் மக்கள் அவதி


மாளந்தூர் காலனியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 21 Dec 2021 8:42 PM IST (Updated: 21 Dec 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த மாளந்தூர் ஊராட்சியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

சுகாதார சீர்கேடு

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் பெய்த மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கின்றது. இந்த மழைநீருடன் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவதி

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கோரிக்கை

இந்த நிலையில், இதே ஒன்றியத்திலுள்ள பேரண்டூர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏராளமான பொதுமக்கள் வாந்தி-பேதி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது, மாளந்தூர் காலனியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் காய்ச்சலால் அவதியுற்று வருகின்றனர்.

எனவே, பேரண்டூர் பிரச்சினை மாளந்தூரில் ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story