திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருவாய் ரூ 2 கோடியே 88 லட்சம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருவாய் ரூ 2 கோடியே 88 லட்சம்
x
தினத்தந்தி 21 Dec 2021 9:17 PM IST (Updated: 21 Dec 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாத உண்டியல் வருமானம் ரூ.2.88 கோடி கிடைத்துள்ளது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாத உண்டியல் வருமானம் ரூ.2.88 கோடி கிடைத்துள்ளது.
உண்டியல் எண்ணிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல்கள் மாதந்தோறும் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து இரண்டு முறை எண்ணப்படுகின்றன. இந்த மாதத்தில் (டிசம்பர்) உண்டியல் முதலில் கடந்த 7-ந் தேதி எண்ணப்பட்டது. 
இரண்டாவது முறையாக நேற்று உண்டியல்கள் எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை தலைமையில் தக்கார் பிரதிநிதியும் ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலை உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில், உதவி ஆணையர்கள் வெங்கடேஷ், ரோஜாலி, அறநிலையத்துறை ஆய்வர்கள் செந்தில்நாயகி, நம்பி, இசக்கிசெல்வம், பொதுமககள் பிரதிநிதிகள் வேலாண்டி ஒதுவார், மோகன், சுப்பிரமணியன், சிவகாசி பதினென்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.
ரூ.2.88 கோடி வருவாய்
கடந்த 7-ந் தேதி எண்ணும் போது ரூ.1 கோடியே 39 லட்சத்து 32 ஆயிரத்து 926 கிடைத்தது.
அதேபோல் நேற்று உண்டியல்களை எண்ணும் போது ரூ.1 கோடியே 48 லட்சத்து 73 ஆயிரத்து 387 கிடைத்தது. ஆக மொத்தத்தில் இந்த மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 88 லட்சத்து 6 ஆயிரத்து 313 கிடைத்துள்ளது.
மேலும், இந்த மாதத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 36 கிராம் தங்கமும், 18 ஆயிரத்து 200 கிராம் வெள்ளியும், 73 வெளிநாட்டு நோட்டுகளும் கிடைத்துள்ளது.


Next Story