தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Dec 2021 9:38 PM IST (Updated: 21 Dec 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கழிவுநீரால் பொதுமக்கள் அவதி 

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியே வராமல் இருக்க மூடி போடப்பட்டு உள்ளது. ஆனால், அந்த அந்த மூடி சற்று திறந்து கிடப்பதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, பாதாள சாக்கடை மூடியை சரியாக மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
தியாகராஜன், பெருமாள்புரம்.

சேறும், சகதியுமான சாலை

நெல்லை அருகே உள்ள டக்கரம்மாள்புரம் ஆன்டன் காலனியில் சமீபத்தில் பெய்த மழையால் சாலை மிகவும் மோசமாக சேறும், சகதியுமான காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே, இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராேஜஷ் பாலு, டக்கரம்மாள்புரம். 

வடியாத மழைநீர் 

நெல்லை தாழையூத்து போலீஸ் சோதனை சாவடி அருகில் உள்ள வையாபுரி நகரில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு சமீபத்தில் பெய்த மழையால் வீடுகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கியது. இந்த மழைநீரானது தற்போது வரை வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி வீடுகளை சூழ்ந்த மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
வேல்முருகன், தாழையூத்து.

குப்பைகள் அகற்றப்படுமா? 

கூடங்குளம் மெயின் ரோட்டில் சிறிய பாலத்தின் கீழ் பகுதியில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், அந்த பகுதியில் போதிய குப்பை தொட்டிகள் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

ஆபத்தான மின்கம்பம்

நாங்குநேரி தாலுகா கீழக்கட்டளை கிராமத்தில் உள்ள வீடுகளின் மேற்பகுதியில் மின்கம்பத்தில் இருந்து மின்கம்பிகள் செல்கின்றன. வீடுகளில் மாடியில் இருந்து கைகளை எட்டும் தூரத்தில் உள்ள இந்த மின்கம்பிகளால் எந்த நேரமும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அந்த மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம்பிநாராயணன், கீழக்கட்டளை.
* இதேபோல் சேரன்மாதேவி அருகே உள்ள திருவிருத்தான்புள்ளி கிராமம் வேலியார்குளம் அருகில் சாலையில் ஆபத்தான நிலையில் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
செல்வராஜ், வேலியார்குளம். 

நாய்கள் தொல்லை

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி செட்டிகுளம் மேலத்தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்களை சில நேரங்களில் நாய்கள் கடிக்கின்றது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். 
எனவே, தெருவில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டுகிறேன்.
குமார், செட்டிகுளம்.

அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் சக்கம்மாள்புரத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் சென்று வருகிறார்கள். ஆனால், அங்கன்வாடி கட்டிடமானது பல்வேறு இடங்களில் விரிசல் விழுந்து காணப்படுகிறது. இதேபோல் தங்கம்மாள்புரத்திலும்  அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையமானது மெயின்ரோட்டில் அருகில் உள்ளது. சக்கம்மாள்புரத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்கவும், தங்கம்மாள்புரத்தில் அங்கன்வாடி மையத்தை சுற்றி காம்பவுண்டு சுவர் கட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஜெபஸ்டின், சக்கம்மாள்புரம்.


Next Story