மாவட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாவட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
நாமக்கல், டிச.22-
மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கினார்.
பேச்சுப்போட்டி
தமிழ் வளர்ச்சி துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.
பரிசளிப்பு விழா
இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் என மொத்தம் 16 மாணவ, மாணவிகளுக்கு ரூ.48 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
இதில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதி உள்பட மாணவ, மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story