ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2021 9:51 PM IST (Updated: 21 Dec 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தேனி: 

அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, ஒன்றிய கிளை, வார்டு அமைப்புகளில் உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கான தேர்தல் இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை நடக்கிறது. இந்த தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. 

இதற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, ‘அ.தி.மு.க. என்றைக்கும் தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்தில் தற்போது நான் ஒருங்கிணைப்பாளர். ஆனால், என்றும் நான் இந்த இயக்கத்தின் தொண்டன். அ.தி.மு.க.வில் தொண்டனாக இருப்பதே பெருமை தான். அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலில் பிரச்சினைகள் வரும் என்று தி.மு.க.வினர் நினைத்தார்கள். ஆனால், முதற்கட்ட தேர்தலை எந்த பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். தொடர்ந்து அனைத்து பொறுப்புகளுக்குமான தேர்தலும் வெற்றிகரமாக நடத்தி முடிப்போம்’ என்றார். இந்த கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் ஜக்கையன், கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் சையதுகான் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story