பாலக்கோடு பகுதியில் வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது


பாலக்கோடு பகுதியில் வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2021 10:03 PM IST (Updated: 21 Dec 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு பகுதியில் வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமார் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் பாலக்கோடு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கோடு- ராயக்கோட்டை சாலையில் ஒரு வேனை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அதில் 26 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிந்தது. இதையடுத்து வேன் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பாலக்கோடு பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் குபேந்திரன் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story