கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை ஒமைக்ரான் வார்டில் மருத்துவ குழுவினர் ஆய்வு


கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை ஒமைக்ரான் வார்டில் மருத்துவ குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Dec 2021 10:05 PM IST (Updated: 21 Dec 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை ஒமைக்ரான் வார்டில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட ஒமைக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டை மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர். ஒமைக்ரான் வார்டில் தேவையான உபகரணங்கள், மருந்துகள் தயார் நிலையில் உள்ளதா? என்பதை உறுதி செய்தனர். மேலும் தினமும் வார்டுகளை சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளித்து, காற்றோட்டமாக வைக்க வேண்டும், மருத்துவ உபகரணங்களின் செயல்பாடுகள் தினமும் கண்காணிக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தினர். ஆய்வின்போது டாக்டர்கள் சசிகுமார் (ஒமைக்ரான் வார்டு), இளங்கோ, செல்வி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் ராஜா, மது, நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் செவிலிய கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர்.

Next Story