தர்மபுரி அருகே டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதி சிறுமி பலி


தர்மபுரி அருகே டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதி சிறுமி பலி
x
தினத்தந்தி 21 Dec 2021 10:14 PM IST (Updated: 21 Dec 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதி சிறுமி பலியானாள்.

தர்மபுரி:
தர்மபுரி அருகே டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதி 5 வயது சிறுமி பலியானாள்.
டிராக்டர் மீது மோதியது
தர்மபுரி அருகே உள்ள கதிர்நாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அருள்மொழி. இவருடைய மகள் கவிஸ்ரீ (வயது 5). அருள்மொழியின் சகோதரர் சிவகுமார் ஸ்கூட்டரில் சிறுமியை தர்மபுரிக்கு அழைத்து வந்தார். பின்னர் வீட்டிற்கு அவர்கள் மீண்டும் சென்று கொண்டிருந்தனர். 
தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் நல்லாம்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் டிரைவர் திடீரென பிரேக் போட்டு உள்ளார். இதனால் நிலை தடுமாறி சிவகுமார் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் டிராக்டரின் பின் பகுதியில் மோதியது. 
சிறுமி பலி
இந்த விபத்தில் ஸ்கூட்டரின் முன்பகுதியில் நின்று சென்ற சிறுமி கவிஸ்ரீ படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானாள். இதில் சிவக்குமார் படுகாயம் அடைந்தார். அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story