கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சியில்  கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2021 10:18 PM IST (Updated: 21 Dec 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் தெய்வீகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பயிர்க் கடன் வழங்க நிர்பந்தம் செய்யக்கூடாது, கடன் வழங்கும் முறையை மாநில அளவில் அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் மற்றும் கருணை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட முன்னாள் இணை செயலாளர் முனுசாமி, ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன், நிர்வாகிகள் சின்னதுரை, ஜெயவேல், ரங்கசாமி, குப்புசாமி, சோலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story