வேடசந்தூரில் பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் கைது


வேடசந்தூரில் பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2021 10:18 PM IST (Updated: 21 Dec 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேடசந்தூர்:
வேடசந்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த 17 வயது சிறுமி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த மாணவியும், வேடசந்தூர் அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்த சூர்யாவும் (23) கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். 
இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சூர்யா, அந்த பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி கடலூருக்கு கடத்திச் சென்றார். அங்கு மாணவியை திருமணம் செய்து அவர் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து வேடசந்தூர் போலீசார் கடலூருக்கு சென்று, அங்கு தங்கியிருந்த சூர்யா மற்றும் மாணவியை வேடசந்தூருக்கு அழைத்து வந்தனர். 
பின்னர் மாணவியை கடத்தி சென்ற சூர்யா மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். மேலும் பள்ளி மாணவியை அவரது பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

Next Story