பழுதடைந்த கட்டிடங்களை கலெக்டர் ஆய்வு
ஆக்கூா் மற்றும் மடப்புரம் ஊராட்சிகளில் பழுதடைந்த கட்டிடங்களை கலெக்டர் ஆய்வு செய்தாா்.
திருக்கடையூர்:
ஆக்கூா் மற்றும் மடப்புரம் ஊராட்சிகளில் பழுதடைந்த கட்டிடங்களை கலெக்டர் ஆய்வு ெசய்தாா்.
கலெக்டர் ஆய்வு
நெல்லை பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை போல் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு பழுதான நிலையில் உள்ள கட்டிடங்களை பார்வையிட அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மடப்புரம், ஆக்கூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள நீரத்்தேக்க தொட்டி, பழைய கால்நடை மருத்துவ கட்டிடம், மருத்துவ குடியிருப்பு, மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள், அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் சத்துணவு உணவை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனகர், மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மெஹ்ராஜின்னிசா, ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story