தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ஜீவானந்தம், சின்னதுரை, இணை செயலாளர்கள் அன்பரசன், சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகராஜன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், முன்னாள் மாநில பொருளாளர், நாகராஜன் சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் கலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
9 அம்ச கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீது எடுக்கப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை திரும்பப்பெற வேண்டும். கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட கம்ப்யூட்டர் உதவியாளர்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெயராமன், நிர்வாகிகள் பொன் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story