கீழ்மொணவூர் பாலாற்றில் இருந்து வேலூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம்


கீழ்மொணவூர் பாலாற்றில் இருந்து வேலூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 21 Dec 2021 10:48 PM IST (Updated: 21 Dec 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

கீழ்மொணவூர் பாலாற்றில் இருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார்.

வேலூர்

கீழ்மொணவூர் பாலாற்றில் இருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார்.

குழாய் உடைப்பு

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாகவும், பாலாற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் மக்களின் குடிநீர் தேவைக்காக உள்ளூர் குடிநீர் திட்டம் மூலம் வேலூர் மாநகராட்சி பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்து வருகின்றனர்.

கீழ்மொணவூர் பாலாற்றில் இருந்து வேலூர் மாநகராட்சிக்கு தண்ணீர் வினியோகம் செய்யக்கூடிய உறை கிணறு உள்ளது. இந்த உரை கிணற்றில் இருந்து மாநகராட்சி பகுதிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. நேற்று காலை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், என்ஜினீயர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் கீழ்மொணவூர் பாலாற்றில் ஆய்வு செய்தனர்.

தண்ணீர் வினியோகம்

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கூறுகையில், கீழ்மொணவூர் பாலாற்றில் இருந்து 50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய முடியும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் அங்கிருந்து வேலூர் ராஜீவ்காந்தி நகர், சாஸ்திரிநகர், வள்ளலார், சின்ன அல்லாபுரம் ஆகிய குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு வரப்படும். அங்கிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதன்மூலம் 6 வார்டுகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

Next Story