தரம் உயர்த்தப்பட்ட சோளிங்கர் நகராட்சியில் வார்டு மறுவரையறை குறித்த ஆலோசனை கூட்டம்
வார்டு மறுவரையறை குறித்த ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த சோளிங்கர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சோளிங்கர் நகராட்சியில் ஏற்கனவே இருந்த 18 வார்டுகளை 27 வார்டுகளாக உயர்த்தி ஆணையிடப்பட்டது. அதற்கான வரைவு வார்டு மறுவரையறை விவரப்பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வார்டு விவரப் பட்டியல்களில் ஏதேனும் மறுப்பு மற்றும் ஆலோசனை இருப்பின் அதனைத் தெரிவிக்கும் பொருட்டு இன்று (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் சோளிங்கரில் வாலாஜா ரோடில் உள்ள வாசவி மஹாலில் கலெக்டர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு வரையறை செய்ததில் ஏதேனும் மறுப்பு மற்றும் ஆலோசனைகள் இருப்பின் மனு மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story