திருப்பத்தூர் பகுதியில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்றும் பணி. கலெக்டர் பார்வையிட்டார்


திருப்பத்தூர் பகுதியில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்றும் பணி. கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 21 Dec 2021 10:49 PM IST (Updated: 21 Dec 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்றும் பணி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள பழுதடைந்த கட்டிடத்தையும், கந்திலி ஊராட்சி ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள பழுதடைந்த கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடந்தது. இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
பின்னர் எலவம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடமாடும் மருத்துவ முகாமில் பொது மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதையும், அங்கன்வாடி மையக்கட்டித்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.

ஆய்வின் போது நல்லதம்பி எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சித்ரகலா, எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா, துணை தலைவர் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story