கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
குளச்சல்
குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் அப்துல் மன்னான், துணை தாசில்தார் குழந்தை ராணி நாச்சியார், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை 6 மணியளவில் குளச்சல் அருகே மரமடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சொகுசு கார் வந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்துவதை பார்த்ததும், டிரைவர் காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அந்த காரில் அதிகாரிகள் சோதனை போட்ட போது, அதில் சுமார் 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
அதை தொடர்ந்து அரிசி மற்றும் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த அரிசியை கடத்தியது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி காப்புக்காட்டில் உள்ள உணவு மற்றும் நுகர்பொருள் கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. காரை கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story