வைகை ஆற்றில் மூழ்கி முன்னாள் ராணுவ வீரர் சாவு


வைகை ஆற்றில் மூழ்கி முன்னாள் ராணுவ வீரர் சாவு
x

பரமக்குடி அருகே வைகை ஆற்றில் மூழ்கி முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.

பரமக்குடி
பரமக்குடி அருகே வைகை ஆற்றில் மூழ்கி முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
முன்னாள் ராணுவ வீரர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திரன்(வயது 43). இவரது மனைவி ராதா. இவர்களுக்கு குழந்தை இல்லை. தர்மேந்திரன் ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. 
இதைத்தொடர்ந்து நேற்று காலை பரமக்குடி அருகே உள்ள தெளித்த நல்லூர் வைகை ஆறு தடுப்பு அணை அருகில் புதருக்குள் ஒரு ஆண் பிணம் ஒதுங்கி கிடப்பதாக அந்த பகுதியில் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் அங்கு சென்று பிணத்தை மீட்டனர். 
மூழ்கி இறப்பு
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்தது தர்மேந்திரன் என தெரிந்தது. பிறகு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு சென்றனர். இறந்த தர்மேந்திரனுக்கு சொந்த ஊர் கச்சாத்தநல்லூர் ஆகும். ஆகவே தடுப்பணை வழியாக அவர் ஊருக்கு செல்லும் போது வைகை ஆற்றுக்குள் தவறி விழுந்து மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீசார் கூறினர். இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story