டிராக்டர் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி
டிராக்டர் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே உரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் தமிழரசன் (வயது 20). கல்லூரி மாணவர். இவர் இரணிபட்டி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்தநிலையில் எம்.அம்மாபட்டியில் உள்ள கடமலை கண்மாயில் ராமசாமி(47) என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் கிராவல் மண்ணை அள்ளிக்கொண்டு சென்றார். அப்போது டிராக்டர் திடீரென நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயம் அடைந்து தமிழரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வலசைபட்டி கிராம நிர்வாக அதிகாரி லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் கிராவல் மண் அள்ள உதவியதாக இரணிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி(45)யை புழுதிபட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் கிராவல் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டர் மற்றும் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story