தேங்கி நின்ற மழைநீரால் மக்காச்சோளம் பாதிப்பு
தளவாய்புரம் அருகே தேங்கி நின்ற மழைநீரால் மக்காச்சோளம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என விவசாயிகள் கூறினர்.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே தேங்கி நின்ற மழைநீரால் மக்காச்சோளம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என விவசாயிகள் கூறினர்.
மக்காச்சோளம்
தளவாய்புரம் அருகே உள்ள சிதம்பராபுரம், தெற்கு வெங்காநல்லூர், நக்கனேரி ஆகிய கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையினால் இங்கு உள்ள அனைத்து கண்மாய் மற்றும் குளம் நிரம்பியது.
இதனால் மக்காச்சோளம் பயிரிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இவற்றால் மக்காச்சோளப் பயிர் தற்போது பட்டுப்போய் விட்டது. இதுபற்றி இப்பகுதி விவசாயிகள் முருகன், மாரியம்மாள், சுப்பையா ஆகியோர் கூறியதாவது:-
நாங்கள் இந்த ஆண்டு புரட்டாசி மாத இறுதியில் தலா 3 ஏக்கர், 2 ஏக்கர் என மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தோம்.
நிவாரணம்
இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையினால் மக்காச்சோளப் பயிரை சுற்றி மழை நீர் தேங்கி நின்றது. இதனால் மக்காச்சோளப்பயிர் தற்போது பட்டுப் போய்விட்டது.
இவற்றால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் இப்படி வீணாகி போகி விட்டதே என வேதனையில் உள்ளோம். ஆகவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story