விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தாயில்பட்டி,
இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ் உள்ள நேரு யுவகேந்திரா சார்பில் வெம்பக்கோட்டை ஒன்றிய அளவிலான கபடி போட்டி, கைப்பந்து, பெண்களின் கயிறு இழுத்தல் போட்டி, தடகள போட்டி, நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா இளையோர் அலுவலர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுக தாய் முன்னிலை வகித்தார். சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறைவிடப்பள்ளி தாளாளர் கோவிந்தன் வரவேற்றார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வ முத்துக்குமரன், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய சேவை தொண்டர்கள் கோபிநாத், கருப்புசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story