பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை ஒழிக்க வேண்டும்


பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை ஒழிக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Dec 2021 12:34 AM IST (Updated: 22 Dec 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

அருப்புக்கோட்டை,
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். 
கொள்முதல்நிலையம் 
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவுப்படி அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்ட தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:- 
 செவல்பட்டியில் நெல்கொள்முதல்நிலையம் அமைக்கவேண்டும். உரத்தட்டுப்பாடு நீடித்து வருகிறது. எனவே அரசு கூட்டுறவு சங்கம் மூலம் அதை சரிசெய்ய வேண்டும். கிருதுமால் நதியில் இருந்து புல்வாய்க்கரை, அ.முக்குளம் உள்ளிட்ட அனைத்து வழித்தடங்களிலும் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்டுப்பன்றி 
காட்டுப்பன்றிகள் மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.  காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதத்தையும் கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தரப்பு கூட்டம் போட்டு காட்டுப்பன்றிகளை ஒழிக்க புதிய உத்தியை கையாள வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர்.  
கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் கூறினார். இந்த கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரும்பாலான அதிகாரிகள் பங்கேற்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Next Story