ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 22 Dec 2021 12:53 AM IST (Updated: 22 Dec 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீது கடந்த ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையிலிருந்து உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வு ஆணைகளை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.


Next Story