கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக சமூக விரோதிகள் சிலர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று தா.பழூர் சிவன் கோவில் அருகில் 2 பேர் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் விற்பதற்காக கஞ்சா பொட்டலங்களை பிரித்துக்கொண்டு இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடிக்க முயன்றபோது ஒரு தப்பியோடி விட்டார். மற்றொருவர் போலீசில் சிக்கினார். அவரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தபோது அவர் தா.பழூர் அருகே உள்ள கீழமெக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்த அருமைராஜின் மகன் ஜெகன்பிரதீஷ்(வயது 20) என்பதும், தப்பியோடியவர் கும்பகோணம் அருகே உள்ள அன்னலக்ரஹாரத்தை சேர்ந்த முனுசாமி மகன் விக்னேஷ்(20) என்பதும் தெரியவந்தது. ஜெகன்பிரதீசிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடியவர் குறித்து விசாரித்தபோது, தப்பி ஓடியவன் கும்பகோணம் அருகே உள்ள அன்னலக்ரஹாரம் முனுசாமி மகன் விக்னேஷ்(20) என்பது தெரியவந்தது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ஜெகன்பிரதீசை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மேலும் தப்பி ஓடிய விக்னேசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story