வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
களக்காடு:
களக்காடு கோவில்பத்து ஆற்றாங்கரை தெருவை சேர்ந்தவர் மாசானம் மகன் பாலமுருகன் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்த பாலமுருகன் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உறவினர்கள் அவரை மீட்டு, களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பாலமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை அருகே உள்ள மேலசெவல் சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலையா (61). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே தவறி விழுந்து காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதில் மனமுடைந்து காணப்பட்ட பாலையா சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலையா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story