ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில தலைவ௳ர் மு.சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் கடந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிஇடை நீக்க உத்தரவை ரத்து செய்து, அவர் பணி ஓய்வில் செல்ல ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மணி, பொருளாளர் ராமலட்சுமி, பிரசார குழு முருகன், செலின், மாநில செயற்குழு உறுப்பினர் வீரபுத்திரன் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story