தமிழ்நாடு ஆயுதப்படை அணி சாம்பியன்
காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு ஆயுதப்படை அணி சாம்பியன் பட்டம் ெவன்றது
மதுரை,
தமிழ்நாடு காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 20-ந் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாடு காவல்துறையில் நான்கு மண்டலங்கள் (வடக்கு மண்டலம், தென் மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம்) சென்னை மற்றும் ஆயுதப்படை போலீஸ், அதிவிரைவு கமாண்டோ படை யை சேர்ந்த 120 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டியில் ஜூடோ, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக், கராத்தே, வாள்சண்டை, பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு ஆயுதப்படை அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர். இரண்டாவது இடத்தை சென்னை பெருநகர காவலர்கள் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளுக்கு நிறைவு நாளான நேற்று பரிசுகள், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் தென் மண்டல ஐ.ஜி. அன்பு, பரிசுப் பொருட்களை வழங்கினார்.
இந்த விழாவில் மதுரை சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஆயுதப்படை துணை சூப்பிரண்டு விக்னேஸ்வரன், மாவட்ட விளையாட்டு அதிகாரி லெனின் கலந்துகொண்டனர்.
---------
Related Tags :
Next Story