அதிகபாரம் ஏற்றிய 13 லாரிகள் பறிமுதல்


அதிகபாரம் ஏற்றிய 13 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Dec 2021 2:00 AM IST (Updated: 22 Dec 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

அதிகபாரம் ஏற்றிய 13 லாரிகள் பறிமுதல்

ஆரல்வாய்மொழி, 
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா இருக்கன் துறையில் இருந்து பாறைப்பொடி, ஜல்லிகள் போன்றவை டாரஸ் லாரிகளில் அதிக பாரத்தில் கேரளாவுக்கு கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று அதிகாலையில் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் மற்றும் போலீசார் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அவற்றில் அதிக பாரத்தில் பாறைப்பொடி, ஜல்லி போன்றவை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிக பாரம் ஏற்றி வந்த மொத்தம் 13 லாரிகளை பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், லாரி ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story