போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகள்
பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள்.
மாடுகள் கூட்டம்
பட்டுக்கோட்டைக்கு தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் பட்டுக்கோட்டை நகரின் போக்குவரத்து நிறைந்த பகுதிகளான மணிக்கூண்டு, தலையாரி தெரு, தஞ்சை சாலை, அறந்தாங்கி சாலை சதுக்கம், வடசேரி சாலை உள்பட பல தெருக்களிலும் மாடுகள் கூட்டம் கூட்டமாக நடுரோட்டில் சுற்றி திரிகின்றன.
அபராதம்
இந்த மாடுகளின் உரிமையாளர்கள் யார் எங்கிருந்து வருகின்றன என தெரியவில்லை. நடுரோட்டில் கூட்டமாக நின்று கொண்டும், படுத்துக் கிடக்கும் இந்த மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகராட்சி பலமுறை நடவடிக்கை எடுத்தும் மாடுகளின் உரிமையாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
எனவே பட்டுக்கோட்டை நகராட்சி போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story