பேராவூரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பேராவூரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 22 Dec 2021 2:13 AM IST (Updated: 22 Dec 2021 11:42 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பேராவூரணி,

பேராவூரணி கடைவீதியில் சுமார் ரூ.15 கோடியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை மேம்பாடு, மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலையோரங்களில் உள்ள  மரங்கள் வெட்டப்பட்டு, சாலைவிரிவாக்கம் செய்யப்பட்டது. மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய பஸ்நிலையம் அருகில் தனியார் இடங்கள் வரை மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் பஸ் நிலைய கட்டிட கடைகளுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி காலதாமதமானது. 

இதனால் பேரூராட்சி நிர்வாக அலுவலர் பழனிவேல் தலைமையில் பொக்லின் எந்திரம் மூலம் பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆக்கிரமிப்பை  அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சந்திரசேகரன், உதவி பொறியாளர் அருண்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.

Next Story