திறமைவாய்ந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்
அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் திறமைவாய்ந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார்.
பகோணம்;
அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் திறமைவாய்ந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர செயலாளர் ராம.ராமநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள். என் ஆர்.வி.எஸ்.செந்தில், சோழபுரம் அறிவழகன், அசோக்குமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது
கடந்த 4 நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஆளும் கட்சியினருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியது போல் அ.தி.மு.க. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும்.
திறமையான நிர்வாகிகள்
10 ஒன்றிய செயலாளர்கள் அடங்கிய குழுவினர் கிளை கழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
எனவே உட்கட்சி நிர்வாகிகள் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி திறமை வாய்ந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story