ஓடும் பஸ்சில் விஷம் குடித்த காதல் ஜோடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை


ஓடும் பஸ்சில் விஷம் குடித்த காதல் ஜோடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 22 Dec 2021 2:34 AM IST (Updated: 22 Dec 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் விஷம் குடித்து மயங்கிய காதல் ஜோடிக்கு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருப்பூர், 
காதல் ஜோடி
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 21). இவர் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த உறவினர் மகளான லோகேஸ்வரி (20) என்பவரை காதலித்து வந்தார். அவர்களது காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து பெங்களூருவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதல் ஜோடி நேற்று பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். சேலம் அருகே வந்த போது அவர்கள் பஸ்சிலேயே திடீரென மயங்கி நிலையில் இருந்தனர்.
போலீசார் விசாரணை
இதை பார்த்து சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த காதல் ஜோடியை சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் ராஜேஷ், லோகேஸ்வரி ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து காதல்ஜோடியின் பெற்றோருக்கு போலீசார் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story