மெலட்டூரில் சேதமடைந்து வரும் அரசு பள்ளி
மெலட்டூரில் சேதமடைந்து வரும் அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெலட்டூர்;
மெலட்டூரில் சேதமடைந்து வரும் அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்நிலைப்பள்ளி
தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்குள்ள பள்ளி கட்டிடங்கள் சரிவர பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. பல கட்டிடங்களில் செடி, கொடிகள் மண்டிய நிலையில் காணப்படுகிறது. இங்கு எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் ஒன்று தரை தளம் பெயர்ந்த நிலையில் பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டிய நிலையில் உள்ளது.
சீரமைக்க கோரிக்கை
மேலும் மாணவர்கள் பயன்பாட்டில் உள்ள மற்றொரு வகுப்பறை கட்டிடம் சரியான பராமரிப்பு இல்லாததால் புல், பூண்டுகள் மற்றும் செடிகள் முளைத்துள்ளதால் கட்டிடத்தின் உறுதி தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டு கட்டிடத்தின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்ட நிலையில் காணப்படுகிறது. எனவே பள்ளி வகுப்பறை கட்டிடங்களை விரைவில் புதுப்பித்து, சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story