‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 22 Dec 2021 2:58 AM IST (Updated: 22 Dec 2021 11:47 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதி சந்தைப்பேட்டையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் பராமரிபின்றி சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
அரவிந்தன் ஒரத்தநாடு.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே நான்கு சாலைகள் சந்திக்கும் இடம் உள்ளது. இந்த பகுதியில் போதுமான வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதனால் நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியில் வாகனங்கள் வேகமாக சென்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபத்துகளால் உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
ரவிச்சந்திரன் ஒரத்தநாடு.

Next Story