உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை


உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
x
தினத்தந்தி 22 Dec 2021 10:19 AM IST (Updated: 22 Dec 2021 10:19 AM IST)
t-max-icont-min-icon

போலி உரம் விற்பனை புகார் எதிரொலியாக பழனி பகுதியில் உள்ள உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்:
பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலி பொட்டாஷ் உரம் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சியை ஒட்டிய பிற மாவட்ட பகுதிகளில் கண்காணிக்கும்படி வேளாண்மை இயக்குனர் உத்தரவிட்டார். 
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, தொப்பம்பட்டி பகுதிகளில் சோதனை நடத்தும்படி வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை அறிவுறுத்தினார். அதன்படி உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) உமா, பழனி உதவி இயக்குனர் மீனாகுமாரி, பழனி தாசில்தார் சசிகுமார் உள்ளிட்ட அதிகாரிகளை கொண்ட குழுவினர் நேற்று பழனியில் உள்ள உரக்கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் தொப்பம்பட்டியில் உள்ள உரக்கடைகளிலும் சோதனை நடத்தினர். இதன்மூலம் மொத்தம் 25 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது உரக்கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த உரத்தை சோதனையிட்டனர்.
ஒருசில கடைகளில் உரத்தின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர். அதோடு போலியான உரம் விற்பனை செய்யக்கூடாது. 
மேலும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரத்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். அதேபோல் பழனி, தொப்பம்பட்டி பகுதிகளில் விவசாயிகளை சந்தித்து போலி உரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போலி உரம் விற்பது தெரியவந்தால் வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

Next Story