திருமண ஆசைகாட்டி 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது


திருமண ஆசைகாட்டி 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2021 1:01 PM IST (Updated: 22 Dec 2021 1:01 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சூளைமேட்டில் திருமண ஆசைகாட்டி 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, 

சென்னை சூளைமேடு வன்னியர் தெருவைச்சேர்ந்தவர் கோகுல் (வயது 20). இவர் ஆயிரம்விளக்கு பகுதியைச்சேர்ந்த 15 வயது சிறுமியுடன், இன்ஸ்டாகிராம் மூலம் பழகினார். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக பழகினார்கள். அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசினார்கள். அப்போது திருமண ஆசைகாட்டி, சிறுமியை கோகுல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போக்சோ சட்டப்பிரிவில் கோகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோகுல் நேற்று கைது செய்யப்பட்டார்.

Next Story