கலெக்டர் அலுவலகம் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 110 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 110 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே நேற்று முன்தினம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்தும், கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அரசு வழிகாட்டுதலின் பேரில் நடந்து கொள்ளாமல் கூட்டமாக கூடி எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து திருவள்ளூர் டவுன் போலீசார் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 81 ஆண்கள், 29 பெண்கள் என மொத்தம் 110 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story