4 கண் உள்ள அதிசய தேங்காய்
உடன்குடி அருகே ஒரு தோட்டத்தில் பறிக்கப்பட்ட தேங்காய்களில், 4கண் கொண்ட அதிசய தேங்காய் இருந்தது
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள நயினார்பத்தை சேர்ந்த செல்வேந்திரன் மகன் ராகவன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை உள்ளிட்ட பல பயிர்களை விவசாயம் செய்து வருகிறார். வழக்கமாக 45 நாட்களுக்கு ஒருமுறை தேங்காய் பறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேங்காய் பறிக்கப்பட்டு பின்னர் அதே பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் விற்கப்பட்டது. வியாபாரி வேலையாட்களுடன் சேர்ந்து தேங்காய்களை உறித்த போது, 4 கண் கொண்ட பெரிய அளவிலான ஒருதேங்காய் இருந்தது. தேங்காய்க்கு எப்போதும் 3 கண்கள் தான் உண்டு. மாறாக 4 கண்கள் கொண்ட தேங்காய் தகவலை கேள்வி பட்டு சுற்று வட்டாரத்திலுள்ள ஏராளமானவர்கள் வந்து, அதிசயமாக பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story