நாகை, நாகூர் பகுதிகளில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


நாகை, நாகூர் பகுதிகளில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Dec 2021 6:12 PM IST (Updated: 22 Dec 2021 6:12 PM IST)
t-max-icont-min-icon

நாகை, நாகூர் பகுதிகளில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்:-

நாகை, நாகூர் பகுதிகளில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

நகராட்சி ஆணையர் ஆய்வு

நாகை, நாகூர் பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகிறதா? என நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில், மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் குணசீலன், உதவி பொறியாளர் சதீஷ் ஆகியோரை கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சில கடைகளில் பாலித்தீன் பைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.11,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி கூறுகையில், ‘தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், உறிஞ்சு குழல்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அபராதம்

அவற்றை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும். நாகை நகராட்சியை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நகராட்சியாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்றார். 
ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், அறிவழகன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story