தர்மபுரியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பாரதிபுரம் மண்டல போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத்தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் மணி, நிர்வாகிகள் முனுசாமி, கோவிந்தசாமி, பூபேஷ்குப்தா, கணேசன், சுதர்சனன், நாராயணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறை தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
காலி பணியிடங்கள்
பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பஞ்சப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள பஞ்சப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story