குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது
வந்தவாசி
வந்தவாசி கோட்டைக்குள் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயனின் மகன் கிரி என்ற கிரிதரன் (வயது 26). அதே தெருவைச் சேர்ந்தவர் அப்ராக் அகமதுவின் மகன் முகமதுசிப் (24). விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்த வரதராஜனின் மகன் சபரிநாதன் (21). செய்யாறு தாலுகா தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகனின் மகன் தமிழ்நிலவன் என்ற அகஸ்தியன் (21). செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா மானாமதி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் ரிஷிநாத் (19).
இந்த 5 பேரும் முன்விரோதம் காரணமாக செய்யாறு தாலுகா மேல்மா கிராமத்தைச் சேர்ந்த ஓசூரான் (21) என்பவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி அவரையும், மனைவி ஹேமாவதியையும் கொலை செய்ய முயன்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வந்தவாசி வடக்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வந்தவாசி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மேற்கண்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். 5 பேரும் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க பரிந்துரை செய்தார். மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் மேற்கண்ட 5 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story