ஆரணியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள்
ஆரணி
மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் 49 பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். ஆரணி வட்டாரக் கல்வி அலுவலர்கள் உதயகுமார், அறிவழகன், ஆரணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) செ.ஜெயசீலி, மேற்கு ஆரணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பாவை, ஆரணி ஒன்றிய மாற்றுத்திறன் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் மணிகுமார் மற்றும் சிறப்பாசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story