திருக்கோவிலூர் அரசு பள்ளியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடு்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருக்கோவிலூர் அரசு பள்ளியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடு்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 22 Dec 2021 10:10 PM IST (Updated: 22 Dec 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அரசு பள்ளியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடு்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அங்குள்ள அரசு அங்கவை, சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமைதாங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள்  குறித்தும் அதிலிருந்து அவர்கள் தங்களை எவ்வாறு காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பது பற்றி வீடியோ மூலம் விளக்கி கூறினார். மேலும் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் கொடுக்க வேண்டும். இந்த நிலை உருவானால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, அந்தோணி குரூஸ் மற்றும் போலீசார்கள் ராமராஜன், ரவி, பாரதி, கனகா ஆகியோர் கலந்துகொண்டனர். 

Next Story