சந்தேகத்திற்குரிய இடங்களில் போலீசார் துப்பாக்கியுடன் இரவு ரோந்து செல்ல சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவு


சந்தேகத்திற்குரிய இடங்களில் போலீசார் துப்பாக்கியுடன் இரவு ரோந்து செல்ல சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவு
x
தினத்தந்தி 22 Dec 2021 10:16 PM IST (Updated: 22 Dec 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

சந்தேகத்திற்குரிய இடங்களில் போலீசார் துப்பாக்கியுடன் இரவு ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார்.

அரக்கோணம்

சந்தேகத்திற்குரிய இடங்களில் போலீசார் துப்பாக்கியுடன் இரவு ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு

ராணிபேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன் நேற்று அரக்கோணம் போலீஸ் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில், போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்திகணேஷ் தலைமையில் அரக்கோணம் டவுன், தாலுகா இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கூட்டம் நடைபெற்றது. 
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் கலந்துகொண்டு அரக்கோணம் அருகே கடந்த 18-ந் தேதி நள்ளிரவில்  4 பேரை தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடும்பணி குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

துப்பாக்கியுடன்...

பின்னர் அவர் பேசுகையில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்வது குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து செல்ல வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்ததை நினைவுபடுத்தினார்.

மேலும் ரோந்து பணியில் ஈடுபடும்போது பழைய குற்றவாளிகள் உள்ள இடங்கள், சந்தேகத்திற்குரிய இடங்களில் துப்பாக்கியுடன் ரோந்து செல்ல வேண்டும். பஸ் நிலையம், ரெயில் நிலையம், கிராமம் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு, சந்தேகப்படக்கூடிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். 

பொதுமக்கள் பயமின்றி இருக்கும் வகையில் தொடர்ந்து இரவு நேர ரோந்து பணியில் போலீசார் அனைவரும் துப்பாக்கி ஏந்தி செல்ல வேண்டும் என்றார். 

Next Story