மஞ்சப்புத்தூரில் 10 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்


மஞ்சப்புத்தூரில்  10 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்
x
தினத்தந்தி 22 Dec 2021 10:20 PM IST (Updated: 22 Dec 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சப்புத்தூரில் 10 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே  வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தஅண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், கண்ணன், குமார் ஆகியோருக்கு சொந்தமான மஞ்சப்புத்தூர் கிராமத்தில் உள்ள கரும்பு வயல் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென எரிந்து அதே ஊரை சேர்ந்த கோபால் என்பவரின் கரும்பு வயலுக்கும் பரவியது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் 10 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம் ஆனது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story