மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 22 Dec 2021 10:22 PM IST (Updated: 22 Dec 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் தொழிலாளி பலி

பல்லடம், 
 பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சிங்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 45). தொழிலாளி. இவர் நேற்று இரவு உணவு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சிங்கனுரில் இருந்து கணபதிபாளையம் நோக்கி சென்றுள்ளார். கள்ளிமேடு பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரவியை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரவியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story