ஜனநாயக முறையில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல்
ஜனநாயக முறையில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
கோபால்பட்டி:
அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல்,நத்தத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர், அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளரும், நத்தம் ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன், தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல், நிலக்கோட்டை, ஆத்தூர், பழனி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் நடந்த தேர்தல்களில் இவர்கள் பங்கேற்று கட்சியினருக்கு விண்ணப்பப்படிவங்களை வழங்கினர்.
1,527 கிளைகள்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 1,527 கிளைகள், 57 நகர வார்டுகள், 273 பேரூராட்சி கிளை அமைப்புகள் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க.வினர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் சுப்புரத்தினம், நத்தம் நகர செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், சுப்பிரமணி, மணிகண்டன், சின்னு ஜெயசீலன், சின்னசாமி, மயில்சாமி, யாகப்பன், நல்லதம்பி, மோகன், பாண்டி, சுப்பிரமணி, பசும்பொன், மாரியப்பன், முத்துசாமி, பழனி நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜ்மோகன், கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் யூசுப்அன்சாரி, இளைஞர் அணி செயலாளர் அன்வர்தீன், தொழிற்சங்க செயலாளர் முத்தையா மற்றும் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story