தம்பதியை கொலை செய்தவர் கைது


தம்பதியை கொலை செய்தவர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2021 10:31 PM IST (Updated: 22 Dec 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

தம்பதியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

ராமேசுவரம், 
ராமேசுவரத்தில் கடந்த 18-ந் தேதி  பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கோவில் ரதவீதி அருகே உள்ள கோவி லுக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில்  பிச்சைக் காரர்கள் வேல்முருகன், அவரது மனைவி ராமு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து கோவில் போலீஸ் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பிச்சைக்கார தம்பதியை கொலைசெய்தது காரைக்குடியை சேர்ந்த பிச்சைக்காரர் மாணிக்கம் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மாணிக்கத்திற்கும், வேல்முருகனுக்கும் கோவில் பிச்சை எடுக்கும்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு இரவில் படுத்து உறங்கும்போது வேல்முருகன் மனைவி மாணிக்கத்தின் பைகளில் இருந்து பணத்தை அடிக்கடி திருடி யதால் ஆத்திரமடைந்த கொலை செய்ததாக மாணிக்கம் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை ராமே சுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story