தியாகதுருகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டத் தலைவர் சாந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி, தலைவர் ரகுராமன், துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தியாகதுருகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் லஞ்சம் மற்றும் முறைகேடான பத்திரப்பதிவுகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில முன்னாள் பொதுச் செயலாளர் ஏழுமலை, வட்ட செயலாளர் அருள்தாஸ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பெரியசாமி, விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் தங்கராசு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story